/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தரக்குறைவாக பேசுவதை தி.மு.க.,வினர் நிறுத்த வேண்டும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்
/
தரக்குறைவாக பேசுவதை தி.மு.க.,வினர் நிறுத்த வேண்டும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்
தரக்குறைவாக பேசுவதை தி.மு.க.,வினர் நிறுத்த வேண்டும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்
தரக்குறைவாக பேசுவதை தி.மு.க.,வினர் நிறுத்த வேண்டும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்
ADDED : ஜன 19, 2024 07:54 AM
புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:
அண்மையில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் அக்கட்சி தலைவர்கள் சிலர், வைத்திலிங்கத்தையும், என்னையும் ஒருமையில் விமர்சித்துள்ளனர். இதன் மூலம் கூட்டணி தத்துவத்தை மீறியுள்ளனர். காங்., எப்போதும் கூட்டணி தர்மத்தை மீறியது இல்லை.
நானும், வைத்திலிங்கமும், உருளையன்பேட்டை தொகுதியில் முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோம். அந்த கூட்டத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ., கலந்து கொண்டார். அவர் எந்த கட்சியையும் சேராதவர். ஆகவே நாங்களும் அந்த கூட்டத்தில் பங்கேற்றோம்.
அதற்காக, தி.மு.க., கூட்டத்தில் எங்களை விமர்சித்து மக்கள் மத்தியில் எங்களுக்கு கெட்ட பெயர் உருவாக்க திட்டமிட்டு தி.மு.க.,வில் சிலர் இந்த வேலையை செய்துள்ளனர்.
வில்லியனுார் தொகுதியில் வட்டார தலைவராக இருந்தவர்களை தி.மு.க.,வில் சேர்த்தது யார்? மணவெளி தொகுதியில் சண்முகம் என்பவர் காங்., கட்சியில் செயல் தலைவராக இருந்தார்.
அவரை தி.மு.க., வில் இணைத்தது யார்?
எங்கள் கட்சியில் இருந்தவர்களை சேர்த்து, கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு விட்டு, காங்., கட்சியை பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்த உரிமையும் இல்லை.
தவறாகவும், தரக்குறைவாகவும் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
இண்டியா கூட்டணியில் குழப்பத்தை தி.மு.க., கொண்டு வர வேண்டாம். புதுச்சேரியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்வர். அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்' என்றார்.
காதில் விழவில்லையாம்
காங்., தலைவர் வைத்திலிங்கம் கூறும்போது, 'இண்டியா கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவர் என்பதை காங்., மூத்த தலைவர் ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வர்.
யாரை சொன்னாலும் அவர்களுக்கு வேலை செய்வோம்' என்றார்.
முதுகில் குத்தும் காங்., என தி.மு.க., கடுமையாக விமர்சனம் செய்துள்ளதே என கேள்வி எழுப்பியபோது, 'அதை நாங்கள் நேரடியாக கேட்கவில்லை. எனவே அதை நாங்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கள் காதில் அப்படிப்பட்ட விமர்சனம் விழவில்லை' என தெரிவித்தார்.

