/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
/
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
ADDED : மே 31, 2025 11:41 PM

பாகூர்: ஏம்பலம் தொகுதியில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்த நாள் விழாவை, காங்., கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.
புதுச்சேரி காங்., கட்சி சார்பில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்த நாள் விழா மாநிலம் முழுதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஏம்பலம் தொகுதி கரிக்கலாம்பாக்கம் நான்கு முனை சந்திப்பில், காங்., தெற்கு மாவட்ட தலைவர் குமரேஸ்வரன் தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மாநில செயலாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
விழாவில், காங்., மாநிலம், மாவட்டம், வட்டாரம், மகளிர், இளைஞர், மாணவர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.