ADDED : ஜூலை 30, 2025 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில், முன்னாள் முதல்வர் எதுவார் குபேர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன்குமார், ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்., சார்பில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நிர்வாகிகள் எதுவார் குபேர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.