/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.ஐ.டி.யு., முன்னாள் தலைவர் பிரபுராஜ் காங்கிரசில் ஐக்கியம்
/
சி.ஐ.டி.யு., முன்னாள் தலைவர் பிரபுராஜ் காங்கிரசில் ஐக்கியம்
சி.ஐ.டி.யு., முன்னாள் தலைவர் பிரபுராஜ் காங்கிரசில் ஐக்கியம்
சி.ஐ.டி.யு., முன்னாள் தலைவர் பிரபுராஜ் காங்கிரசில் ஐக்கியம்
ADDED : நவ 17, 2025 02:47 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சி.ஐ.டி.யு. முன்னாள் தலைவரும், மா. கம்யூ., கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினருமான தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த பிரபுராஜ், காங்., மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் காங்., கட்சியில் நேற்று இணைந்தார்.
இவருடன் சங்க நிர்வாகிகள் அந்தோணி குரூஸ், உதய சங்கர், தமிழரசன், சங்கர்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் மாநில இணைச் செயலாளர் ஜானகி, நகர கமிட்டி நிர்வாகிகள் நேத்திராவதி, மீனாட்சி, மீன்விழி, ஆரோக்கிய மேரி, மீனவர் பகுதி நிர்வாகிகள் ரூபன், அகிலன், இளம் வழக்கறிஞர் ஆஷா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் மா.கம்யூ., மற்றும் சி.ஐ.டி.யு., இருந்து விலகி காங்., கட்சியில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., நிர்வாகிகள் பாலன், தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ராஜா தியேட்டர் சிக்னல் இருந்து ஊர்வலமாக வைசியால் வீதியில் உள்ள காங்., அலுவலகத்திற்கு சென்று, உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.

