ADDED : ஜன 03, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற மின் ஊழியர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால், திருநள்ளாறு சுரக்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி, 65. இவர், மின்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். கடந்த சில மாதங்களாக ரத்தினசாமி நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை வெளியே சென்ற ரத்தினசாமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் தேடியபோது, அப்பகுதி மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள குழந்தைகள் விளையாடும் பூங்காவில் சறுக்கு மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
புகாரின் பேரில், திருநள்ளார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.