/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் கவர்னர் முதல்வருக்கு வாழ்த்து
/
முன்னாள் கவர்னர் முதல்வருக்கு வாழ்த்து
ADDED : ஆக 08, 2025 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:புதுச்சேரிக்கு வந்த முன்னாள் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி தனியார் விடுதி ஒன்றிற்கு முன்னாள் கவர்னர் தமிழிசை நேற்று வந்தார்.
அவரை, முதல்வர் ரங்கசாமி சந்தித்து, சால்வை அணிவித்தார். தொடர்ந்து, தமிழிசை முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
பின் அவர், முதல்வரிடம் தங்களின் ஆசி தனக்கு அரசியலிலும் தேவை என தெரிவித்தார். இதையடுத்து முதல்வர் ரங்கசாமி, அவருக்கு வாழ்த்து கூறினார்.