/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் கவர்னர் கிரண்பேடி புத்தகம்; பிரெஞ்சு மொழி பெயர்ப்பு வெளியீடு

ADDED : நவ 09, 2024 06:23 AM

புதுச்சேரி : முன்னாள் கவர்னர் கிரண்பேடியின் புத்தக வெளியீட்டு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் கவர்னர் கிரண்பேடி எழுதிய, 'அச்சமற்ற ஆட்சி' எனும் புத்தகத்தின், பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நுால் வெளியீட்டு விழா புதுச்சேரி பல்கலையில் நேற்று நடந்தது. விழாவில் பல்கலை துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கினார். இவரும், பிரான்ஸ் துாதர் எட்டியென் ரோலண்ட் பீக்கும் புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.
இந்த புத்தகத்தை பல்கலை முன்னாள் பிரெஞ்சு துறைத்தலைவர் பன்னீர்செல்வம் மொழிபெயர்த்துள்ளார்.
விழாவில் கலாச்சார இயக்குனர் கிளமென்ட் லுார்து, பதிவாளர் ரஜ்னீஷ் புடணி, கிரண்பேடியின் முன்னாள் செயலாளர் தேவநீதி தாஸ், தி ஸ்டடி பள்ளி தாளாளர் சந்தைய செரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில், கிரண்பேடி பல்கலை மாணவர்களுடன், கலந்துரையாடினார். இதில் தலைமைத்துவம், சமூக சேவை, தைரியம், முன்னேற்றம் குறித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை, பல்கலை மேலாண்மை மற்றும் பிரெஞ்சு துறை ஏற்பாடு செய்திருந்தது.