sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மாஜி அமைச்சர் கந்தசாமி பிறந்த நாள் விழா

/

 மாஜி அமைச்சர் கந்தசாமி பிறந்த நாள் விழா

 மாஜி அமைச்சர் கந்தசாமி பிறந்த நாள் விழா

 மாஜி அமைச்சர் கந்தசாமி பிறந்த நாள் விழா


ADDED : பிப் 01, 2026 05:39 AM

Google News

ADDED : பிப் 01, 2026 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: காங்., கட்சியின் 140 வது ஆண்டு விழா பொதுக் கூட்டம், பாதயாத்திரை, முன்னாள் அமைச்சர் கந்தசாமியின் 60வது பிறந்த நாள் விழா, கிருமாம்பாக்கத்தில் நடந்தது.

முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். தெலுங்கான மாநில துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா, தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

புதுச்சேரி காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய காங்., புதுச்சேரி பொறுப்பா ளர் சூரஜ்ஹெக்டே, கர்நாடக முன்னாள் எம்.பி., அனுமந்தையா, அகில இந்திய செயலாளர் நிவேதித் ஆல்வா, அகில இந்திய எஸ்.சி., பிரிவு தேசிய பொறுப்பாளர் ஹர்ஷிதா காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், பாலன், பொதுச் செயலாளர் இளையராஜா, செயலாளர் விஜயலட்சுமி, சம்பத் உட்பட பல ர் வாழ்த்தி பேசினர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், 60 கிலோ கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஏம்பலம் தொகுதி வட்டார காங்., தலைவர்கள் பாப்பையா, மண்ணாங்கட்டி வரவேற்றனர். விக்னேஷ் கந்தசாமி நன்றி கூறினார்.

முன்னதாக கிருமாம்பாக்கம் எல்லையில் இருந்து புதுச்சேரி காங்., கட்சியினர், ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்தும், ஊழலை விளக்கும் வகையில், பாதயாத்திரை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் கந்தசாமி, காங்., செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் தனித்தனியே தொண்டர்கள் பாதயாத்திரை சென்றனர்.






      Dinamalar
      Follow us