/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கறவை மாடு வழங்கியதில் முறைகேடு மாஜி அமைச்சர் கவர்னரிடம் மனு
/
கறவை மாடு வழங்கியதில் முறைகேடு மாஜி அமைச்சர் கவர்னரிடம் மனு
கறவை மாடு வழங்கியதில் முறைகேடு மாஜி அமைச்சர் கவர்னரிடம் மனு
கறவை மாடு வழங்கியதில் முறைகேடு மாஜி அமைச்சர் கவர்னரிடம் மனு
ADDED : நவ 21, 2024 05:30 AM

புதுச்சேரி: கறவை மாடு வழங்கியதில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று, ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசில் நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல்கள் அதிகரித்து உள்ளன.
குறிப்பாக, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மானியத்துடன் கூடிய கறவை மாடு வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
மேலும், காரைக்கால் மாவட்டத்தில் அதிக மக்களுக்கு பணி வழங்கி வந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூட்டுறவு நுாற்பாலையில் நடந்த நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல் குறித்து விசாரணை நடத்திட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.