/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து விவகாரத்தை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் மாஜி அமைச்சர் வலியுறுத்தல்

ADDED : டிச 06, 2025 05:06 AM
புதுச்சேரி: போலி மருந்து தயாரிப்பு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆளும் அரசுக்கும், ஏற்கனவே இருந்த அரசுக்கும் சம்மந்தம் இருப்பதால், அவற்றை மூடி மறைக்கும் செயலில் இன்றைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகையால், சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்தி, போலி மருந்து தயாரிப்பு எப்படி நடந்தது. மருந்து தரக்கட்டுபாட்டு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்தனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். மேலும், இந்த முறைகேடு குறித்து அரசு இதுவரை வாய் திறக்காமல் இருப்பது மிக மோசமான நடவடிக்கை ஆகும்.
சபாநாயகர் விளக்கம் அளிப்பது முக்கியமில்லை. சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் என்ன சொல்கிறார். பிப்டிக் நிறுவனம் இடம் கொடுத்தது என்றால் அந்த தொழில்துறை அமைச்சர் என்ன செய்கிறார்.
இதில், என்ன நடந்தது என்பதை பகீரங்கமாக மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்று எத்தனையோ கண்ணுக்கு தெரியாத பல முறைகேடுகள் நடந்து வருகிறது.
ஆட்சியாளர்களின் தயவு இருப்பதால் அவை எல்லாம் வெளியே தெரியாமல் உள்ளது. இப்பிரச்னையை கம்யூ., கட்சி மக்கள் மத்தியில் கொண்டு சென்று போராட்டம் நடத்தும் என்றார்.