/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனையில் களமிறங்கும் மாஜி அமைச்சரின் மனைவி
/
திருபுவனையில் களமிறங்கும் மாஜி அமைச்சரின் மனைவி
ADDED : ஆக 30, 2025 11:53 PM

பா.ஜ.,வை சேர்ந்த சாய்சரவணன்குமார் சமீபத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தனது பதவி பறிப்பை தடுக்க யாரும் முன்வராததால், பெரும் வருத்தத்தில் உள்ள இவர், வரும் தேர்தலில் தனது குடும்பத்தில் இருந்து இருவர் சட்டசபைக்கு சென்றாக வேண்டும் என, கங்கனம் கட்டி, தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளார் .
மீண்டும், ஊசுடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள அவர், தொகுதியில் நிறைவேற்றப்படாத பல்வேறு பிரச்னைகளை தீர்க்க ஒவ்வொரு அலுவலகமாக சென்று போராட்டம் நடத்தி வருகிறார்.
மேலும், தனது மனைவி அண்ணா பிரபாவதியை திருபுவனை தொகுதியில் களமிறக்கியுள்ளார். அவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன், திருபுவனை தொகுதியின் சனி மூலையாக கருதப்படும் செல்லிப்பட்டில் இருந்து வீடு, வீடாக சென்று அப்பகுதி பெண்களிடம் தலா 2 கிலோ சர்க்கரை கொடுத்து, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளேன். உங்கள் ஆதரவு எனக்கு தர வேண்டும் என்று கேட்டு வருகிறார்.
ஏற்கனவே இத்தொகுதியில் பாஜ., கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்., வேட்பாளர் கோபிகா போட்டியிட்டார். அதனால் வரும் தேர்தலில் இத்தொகுதியில் என்.ஆர்.காங்., மீண்டும் போட்டியிடும் நிலையில், சாய் சரவணன்குமாரின் மனைவி இத்தொகுதியில் தேர்தல் பணியை துவங்கியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
மேலும் இத்தொகுதியின் தற்போதைய சுயேச்சை எம்.எல்.ஏ., வான அங்காளன் பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.