/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகல்
/
முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகல்
முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகல்
முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகல்
ADDED : நவ 20, 2025 05:57 AM

புதுச்சேரி: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முதலியார்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர். அ.தி.மு.க.,வில் மாநில ஜெ., பேரவை செயலாளராக இருந்தவர். இவர், அ.தி.மு.க., சார்பில், ஒரு முறை நகராட்சி கவுன்சிலராகவும், இருமுறை முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மூன்றாம் முறையாக முதலியார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இருப்பினும் தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்த அவர், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
அவர், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க.,வில் நான் 40 ஆண்டிற்கு மேலாக உறுப்பினராக பணியாற்றி வருகிறேன். முன்னாள் முதல்வர் ஜெ., மற்றும் தாங்கள் வழங்கிய பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்தேன். ஒரு முறை நகராட்சி கவுன்சிலராகவும், இரு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றினேன்.
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கட்சி பணியாற்றவும், கவுன்சிலராகவும், எம்.எல்.ஏ., வாகவும் மக்கள் சேவை செய்ய, எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்.
தற்போது, என்னால் தொடர்ந்து கட்சி பணியாற்ற இயலாத சூழல் உள்ளது.
அதனால், நான் வகித்து வரும் புதுச்சேரி மாநில ஜெ., பேரவை செயலாளர் மற்றும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள பாஸ்கர், விரைவில் தேசிய கட்சியான பா.ஜ.,வில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

