sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பாதயாத்திரையை நிறுத்திய மாஜி எம்.எல்.ஏ.,: காங்., அதிர்ச்சி

/

 பாதயாத்திரையை நிறுத்திய மாஜி எம்.எல்.ஏ.,: காங்., அதிர்ச்சி

 பாதயாத்திரையை நிறுத்திய மாஜி எம்.எல்.ஏ.,: காங்., அதிர்ச்சி

 பாதயாத்திரையை நிறுத்திய மாஜி எம்.எல்.ஏ.,: காங்., அதிர்ச்சி


ADDED : பிப் 22, 2026 05:16 AM

Google News

ADDED : பிப் 22, 2026 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: நடை பயணத்தை தனது தொகுதியில் நடத்தாமல் நிறுத்திய மாஜி எம்.எல்.ஏ., வின் அதிருப்தியை சரி செய்ய முடியாமல் புதுச்சேரி காங்., தவித்து வருவது கட்சியினரிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி காங்., சார்பில், பாத யாத்திரை கடந்த ஜன., மாதம் துவங்கி பல தொகுதிகளில் நடந்தது. தேர்தலில் காங்., வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை குறி வைத்து இந்த பாதையாத்திரை நடத்தப்பட்டது.

அந்தந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புவர்கள் இதற்கான செலவினை ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் நகரத்தின் அருகிலுள்ள 40 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியில் வெற்றி பெற முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் தீவிரமாக பணியாற்றி வந்தார். திடீர் என்ன காரணமோ தெரியாமல் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டார். இதனால் இந்த தொகுதியில் நடைபெற வேண்டிய பாதயாத்திரையும் இதுவரை நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டு விட்டது.

மாஜியின் கோபத்திற்கு என்ன காரணம் என புரியாமல் கட்சித் தலைமையும், காங்., கட்சியினரும் புலம்பி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us