/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தொகை முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தொகை முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை
விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தொகை முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை
விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தொகை முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஜன 11, 2025 05:12 AM
புதுச்சேரி: தேசிய அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகையை வழங்க வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர் வலியுறுத்தியுள் ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசிய அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு புதுச்சேரி அரசின் விளையாட்டுத்துறை சார்பாக பரிசுத்தொகை வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
தேசிய அளவில் வெற்றி பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த நுாற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு வழங்கவேண்டிய பரிசுத்தொகை 2009ம் ஆண்டிற்கு பிறகு வழங்கவில்லை. இதனால் விளையாடு வீரர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
தேசிய அளவில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கும் சேரவேண்டிய பரிசுத் தொகையினை வழங்க கவர்னர், முதல்வர், விளையாட்டு துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.