தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சோலை நகர் மீனவ பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆய்வு 

சோலை நகர் மீனவ பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆய்வு 

சோலை நகர் மீனவ பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆய்வு 


ADDED : டிச 01, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சோலை நகரில் ஏற்பட்டு வரும் கடலரிப்பை முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் பார்வையிட்டு, மீனவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார்.

பெஞ்சல் புயலால், கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக, புதுச்சேரி சோலை நகர் மீனவர்கள் தங்கள் படகுகளையும் மீன் பிடி உபகரணங்களையும் பாதுகாப்பாக வைக்க இடம் இல்லாமல் தவித்து வந்தனர்.

இவர்கள், தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணனை சந்தித்து மீன்பிடி படகுகள், மீன்பிடி சாதனங்களை வைக்க இடம் தயார் செய்து கொடுக்கவும், கடலரிப்பை தடுக்க துாண்டில் முள் வளைவு அமைக்க கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அவர் நேற்று சோலை நகரில் மீனவர்களுடன் சென்று கடலரிப்பு பகுதியை பார்வையிட்டார். அப்பொழுது மீனவர்கள் கூறிய துாண்டில் முள் வளைவு கோரிக்கை எதிர்க்கட்சி தலைவர் சிவாவிடம் தெரிவித்து இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us