/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி எதிரொலி மாஜி எம்.எல்.ஏ., கட்சி விலகினார்
/
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி எதிரொலி மாஜி எம்.எல்.ஏ., கட்சி விலகினார்
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி எதிரொலி மாஜி எம்.எல்.ஏ., கட்சி விலகினார்
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி எதிரொலி மாஜி எம்.எல்.ஏ., கட்சி விலகினார்
ADDED : ஏப் 13, 2025 05:35 AM

காரைக்கால் : அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி எதிரொலியாக காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ., அசனா அ.தி.மு.க.,விலிருந்து விலகினார்.
காரைக்காலை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வான அசனா, மறைந்த தமிழக முதல்வர் ஜெ., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். பின், 2016ம் ஆண்டு காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மீண்டும், 2021ல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இவர், தி.மு.க., வேட்பாளர் நாஜிமிடம் தோல்வி அடைந்தார்.
பின், அ.தி.மு.க., மாவட்ட துணை செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ., அசனா நேற்று அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: காரைக்காலில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியால், தோல்வி அடைந்தோம். இனி பா.ஜ., வுடன் கூட்டணி இல்லை என, எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தற்போது மீண்டும் கூட்டணி உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறுபான்மை மக்களின் ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என்பதால், ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து கட்சியை விட்டு விலகுவதாக முடிவெடுக்கப்பட்டது.
வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என, தெரிவித்தார். இதற்கிடையே, அவரது வீட்டில் இருந்த அ.தி.மு.க., கட்சி கொடி அகற்றப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி உறுதி செய்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ., அசனா கட்சியிலிருந்து விலகியது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

