/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வில் இணைந்தனர்
/
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வில் இணைந்தனர்
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வில் இணைந்தனர்
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வில் இணைந்தனர்
ADDED : நவ 28, 2025 04:47 AM

புதுச்சேரி: முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், அசனா த.வெ.க.,வில், இணைந்தனர்.
புதுச்சேரி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அசனா ஆகியோர், கடந்த சில தினங்களுக்கு முன், த.வெ.க., தலைவர் விஜயை, அடையாரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்நிலையில், இருவரும் நேற்று விஜய் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தனர்.
இது குறித்து த.வெ.க., தலைவர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில், 'புதுச்சேரி மாநிலத்தில் எம்.எல்.ஏ.,க்களாக சிறப்பாக பணியாற்றி, அனைவரிடத்திலும் நன்மதிப்பை பெற்ற சாமிநாதன், அசனா ஆகியோர், த.வெ.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டு மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க உள்ளனர். அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவர்களுக்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

