sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாஜி எம்.எல்.ஏ., மனைவி மீது தாக்குதல்

மாஜி எம்.எல்.ஏ., மனைவி மீது தாக்குதல்

மாஜி எம்.எல்.ஏ., மனைவி மீது தாக்குதல்


ADDED : டிச 26, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 05:55 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதலியார்பேட்டையில் சாலை மறியல்

புதுச்சேரி: முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ., மனைவியை தாக்கியதை கண்டித்து, பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

முதலியார்பேட்டை, ஜோதி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ.,. இவரது மனைவி மல்லிகா, 61. இவருக்கும், பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில், மல்லிகா தாக்கப்பட்டார்.

தாக்கியவர்களை கண்டித்து பா.ஜ., எம்.எல்.ஏ., அசோக்பாபு தலைமையில், கட்சியினர் மற்றும் மல்லிகாவின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், முதலியார்பேட்டையில், போலீஸ் ஸ்டேஷன் முன், நேற்று இரவு 9:45 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்கியவர்களை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.

தகவலறிந்து, வந்த எஸ்.பி., பக்தவச்சலம், மறியல் செய்தவர்களிடம், பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்று இரவு 11:30 மணியளவில் மறியலை கைவிட்டனர். இச்சம்பவம் முதலியார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us