/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் மாணவர்களுக்கு மடிக்கணினி மாஜி எம்.பி.,ராமதாஸ் வலியுறுத்தல்

ADDED : பிப் 15, 2024 04:35 AM
புதுச்சேரி : காரைக்கால் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என முன்னாள் எம்.பி.,ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில்உள்ள அரசு பள்ளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய பிராந்தியமாகிய காரைக்காலில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இன்னும் மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. இங்கே 15 பள்ளிகளில் பிளஸ்1 வகுப்பில் 1649 மாணவ மாணவியரும் பிளஸ்2 வகுப்பில் 1681 பேரும் ஆக மொத்தம் 3330 பேர் பயில்கின்றனர்.
இவர்களுக்கு இதுவரை ஒரு கணினி கூட வழங்கவில்லை ஏன் இந்த பாகுபாடு என்றும் தெரியவில்லை.
அனைத்து மாணவர்களுக்கும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் மடிக்கணினிகள் அளிக்கப்படும் என்ற கல்வி அமைச்சரின் உறுதிமொழி செயல்படுத்தப்படுமா என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும் காரைக்கால் மாணவர்களுக்கு உடனடியாக இந்த மடிக்கணினிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.