/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு
/
மாஜி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : டிச 20, 2025 06:26 AM

பாகூர்: பாகூர் அடுத்த குடியிருப்புபாளையத்தை சேர்ந்தவர் கலாவதி, 71; ஓய்வு பெற்ற கல்வித்துறை கண்காணிப்பாளர். இவரது இரு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. கலாவதி மட்டும் குடியிருப்புபாளையத்தில் தனியாக வசித்து வருகிறார்.
இவர், கடந்த 17ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு புதுச்சேரியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், நேற்று காலை கலாவதி வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்ததை கண்டு பக்கத்து வீட்டினர் தகவல் தெரிவித்தனர்.
கலாவதி வந்து பார்த்த போது,வீட்டின் பின்புறம் இருந்த இரும்பு கதவு உள்ளிட்ட 5 கதவுகள் உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைந்திருந்தது. பீரோவில் வைத்திருந்த வெள்ளி சுவாமி சிலை, காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

