/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் மரணம்
/
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் மரணம்
ADDED : டிச 09, 2024 12:48 AM

புதுச்சேரி : புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், 93. உடல் நலக்குறைவால் சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கை பெற்ற இவர், புதுச்சேரியில், 1980 முதல் 1983 வரை, 1990 முதல் 1991 வரை என, இரு முறை தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்தார்.
முன்னதாக, அ.தி.மு.க.,வில் இருந்த இவர் 1974 முதல் 1977 வரை சமூக நலத் துறை அமைச்சராகவும், 1977 முதல் 1980 வரை உள்துறை அமைச்சராகவும் இருந்தார். கடைசியில் காங்., கட்சியில் இணைந்து பணியாற்றினார்.
இவர், 1931 ஜன., 31ல் பிறந்தார். சென்னை லயோலா கல்லுாரியில் பி.ஏ., படித்துள்ளார். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், கோமதி, யசோதா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
அவரது உடல் சொந்த ஊரான புதுச்சேரி, மடுகரை ரெட்டியார் வீதியில் இன்று பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 4:00 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
அவரது மறைவினையொட்டி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா, புதுச்சேரி காங்., தலைவர் வைத்திலிங்கம் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவையொட்டி புதுச்சேரியில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்து அரசு மரியாதை செலுத்தப்படுகிறது.