/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொலை மாநிலமாகும் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
/
கொலை மாநிலமாகும் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
கொலை மாநிலமாகும் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
கொலை மாநிலமாகும் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : அக் 05, 2025 03:20 AM
புதுச்சேரி புதுச்சேரியை கொலை மாநிலமாக அரசு மாற்றியுள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகள் நிறைந்து மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய மாநிலமாக இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் ஆட்சியாளர்களால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, மதுக்கடைகள் நிறைந்த மாநிலமாகவும், கொலைகள் நிறைந்த மாநிலமாக மாறி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில், மக்கள் நெருக்கமான பகுதிகளில் 3 கொலைகள் நடந்துள்ளது. இது, மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை காட்டுகிறது.
சிறிய மாநிலமான புதுச்சேரி அதிக கொலைகள் நடக்கும் மாநிலமாக மாறி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் மது கடைகளை திறந்ததே இதற்கு காரணம். இனியேனும் அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு பொறுப்பேற்று, போலீஸ் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.