/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வரிடம் முன்னாள் ராணுவ வீரர்கள் மனு
/
முதல்வரிடம் முன்னாள் ராணுவ வீரர்கள் மனு
ADDED : அக் 17, 2025 11:18 PM

புதுச்சேரி: புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச்சங்க தலைவர் மோகன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
க டந்த 6 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வரும் முப்படை நல வாரிய ஆண்டுக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.
கேந்திரி ய சைனிக் போர்டு ஆணைப்படி முப்படை நலவாரிய அலுவலகத்தில் பொது சேவை மையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
முப்படை நலவாரியம் மூலம் மாதாந்திர உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கு ரூ. 12 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக உயர்த்தித் தர வேண்டும்.
முப்படை நல வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இலவச மனைப்பட்டா வேண்டுகோளை தகுதி வாய்ந்தவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது.
சந்திப்பின்போது, நல சங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ராமமூர்த்தி உடனிருந்தார்.