/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி சபாநாயகர் சிவக்கொழுந்து என்.ஆர்.காங்.,கில் இணைந்தார்
/
மாஜி சபாநாயகர் சிவக்கொழுந்து என்.ஆர்.காங்.,கில் இணைந்தார்
மாஜி சபாநாயகர் சிவக்கொழுந்து என்.ஆர்.காங்.,கில் இணைந்தார்
மாஜி சபாநாயகர் சிவக்கொழுந்து என்.ஆர்.காங்.,கில் இணைந்தார்
ADDED : ஜூலை 15, 2025 07:30 AM

புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் மூவாயிரம் பேருடன் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்தார்.
லாஸ்பேட்டை குமரன் நகரில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்கள் மூவாயிரம் பேருடன் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, ரமேஷ்குமார் ஆகியோர் என்.ஆர்.காங்.,கட்சியில் இணைந்தனர்.தொடர்ந்து சிவக்கொழுந்துவின் என்.ஆர்.காங்., அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து இரண்டு கோவில்களுக்கு தலா ரூ. 5 லட்சம் மற்றும் மகளிர்களுக்கு இலவச தையல் மெஷின் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் லட்சுமி நாராயணன், ரமேஷ் எம்.எல்.ஏ., மற்றும் என்.ஆர். காங்., நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.