ADDED : ஜன 19, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கம்யூ., மூத்த தலைவர் ஜீவானந்தம் 62வது நினைவு நாளையொட்டி, புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் தலைமை தாங்கினார். இலக்கிய பெருமன்றத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாலகங்காதரன், ராதாகிருஷ்ணன், முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஜெகஜோதி, துணை தலைவர்கள் சந்திரசேகர், கலியமுருகன், சுந்தர முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள ஜீவானந்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.