தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கால்நடை மருத்துவமனை கட்டட அடிக்கல் நாட்டு விழா

 கால்நடை மருத்துவமனை கட்டட அடிக்கல் நாட்டு விழா

 கால்நடை மருத்துவமனை கட்டட அடிக்கல் நாட்டு விழா


ADDED : டிச 16, 2025 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: உறுவையாறு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கு வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

மங்கலம் தொகுதி உறுவையாறு கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் சாலைகள் உட்கோட்டம் சார்பில் ரூ.61 லட்சம் செலவில் சுற்று மதில் சுவருடன் கால்நடை மருத்துவமனை கட்டடம் அமைப்பதற்கு நேற்று பூமி பூஜை விழா நடந்தது.

கால்நடை துறை இயக்குனர் டாக்டர் லதா மங்கேஷ்வரி முன்னிலை வகித்தார். வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் புதிய கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப்பொறியாளர் சரவணன், இளநிலைப் பொறியாளர் அர்ஜீனன், ஒப்பந்ததாரர் பன்னீர்செல்வம் மற்றும் கிராம என்.ஆர்.காங்., பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us