/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதையில் ரகளை நான்கு பேர் கைது
/
போதையில் ரகளை நான்கு பேர் கைது
ADDED : டிச 15, 2025 06:01 AM
காரைக்கால்: பொது இடத்தில் மதுபோதையில் ஆபாசமாக பேசிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் திருப்பட்டினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நேற்று முன்தினம் ரயில் நிலையம் அருகில் ரயில் பயணிகளிடம் குடிபோதையில் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் நாகூர் திட்டச்சேரி பனங்குடியை சேர்ந்த ராமமூர்த்தி, 28; என்பது தெரியவந்தது.
பின்னர் திருப்பட்டினம் போலீசார் ராமமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்னர். இதுப்போல் திருநள்ளாறு நளன்குளம் அருகில் பொதுமக்களுக்கு குடிபோதையில் ஆபாசமாக பேசியதாக திருநள்ளாறு பகுதியை சேர்ந்த ஜெயசிம்மன் 38, பாஸ்டின் தாமஸ் 43, செந்தில்குமார் 48 ஆகிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

