/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோழிக் கறி திருடி விற்ற நான்கு பேர் கைது
/
கோழிக் கறி திருடி விற்ற நான்கு பேர் கைது
ADDED : ஜன 17, 2026 05:15 AM
புதுச்சேரி: கோழி இறைச்சி கடை யில், நுாதன முறையில் கோழி கறியை திருடி விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார், சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுஜன், 24. இவர் வில்லியனுார் - விழுப்புரம் சாலை, சுல்தான்பேட்டையில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அசார், 20; இஸ்மாயில், 31; ஜலால், 30; கரிக்கலாம்பாக்கம் பாஸ்கரன், 49, ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் அசார், கோழி கழிவுகளை கொட்டும் வாளியில் 10 கிலோ கோழிக் கறியை மறைத்து எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுஜன் விசாரிக்கையில், கோழி கழிவுக்கு நடுவே கோழி இறைச்சியை கடத்தி பல்வேறு ஓட்டல்களில் விற்பனை செய்ததும், கிடைக்கும் லாபத்தில் ஊழியர்களே பங்கு போட்டு கொண்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து சுஜன் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அசார் உட்பட 4 ஊழியர்களை கைது செய்தனர்.

