/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நான்கு வழிச்சாலை மேம்பாலம் டில்லி மத்திய குழுவினர் ஆய்வு
/
நான்கு வழிச்சாலை மேம்பாலம் டில்லி மத்திய குழுவினர் ஆய்வு
நான்கு வழிச்சாலை மேம்பாலம் டில்லி மத்திய குழுவினர் ஆய்வு
நான்கு வழிச்சாலை மேம்பாலம் டில்லி மத்திய குழுவினர் ஆய்வு
ADDED : டிச 26, 2024 05:47 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நான்கு வழிச்சாலை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக, டில்லி மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் கொக்கு பார்க் முதல் மரப்பாலம் சிக்னல் அருகில் வரை மொத்தம், 2.8 கி.மீ., துாரத்திற்கு, நான்கு வழிச்சாலை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் சஞ்ஜை கர்க், சென்னை கிளை தலைமை பொறியாளர் மீனா தலைமையிலான, மத்திய குழுவினர் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பான வரைபடங்களை காட்டி, அமைச்சர் லட்சுமி நாராயணன், அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சருடன் டில்லி மத்திய குழு அதிகாரிகள் ராஜிவ் சதுக்கத்தில் நேற்று ஆய்வு நடத்தினர்.
இந்த குழுவினர் தொடர்ந்து வரும், 28ம் தேதி வரை புதுச்சேரியில் முகாமிட்டு, மேம்பாலம் குறித்த பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.