/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி பத்திரம் தயார் செய்து மோசடி: 2 பேர் மீது வழக்கு
/
போலி பத்திரம் தயார் செய்து மோசடி: 2 பேர் மீது வழக்கு
போலி பத்திரம் தயார் செய்து மோசடி: 2 பேர் மீது வழக்கு
போலி பத்திரம் தயார் செய்து மோசடி: 2 பேர் மீது வழக்கு
ADDED : செப் 15, 2025 02:07 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ஜெயமாலா, 40; இவர் தனது தோழியான, அரியாங்குப்பம், டோல்கேட் பல்லவன் வீதியை சேர்ந்த இந்திரா என்பவருடன் இணைந்து 2019ம் ஆண்டு முதல் சுப்பையா நகரில் உள்ள சில்லரை மதுபானக் கடையை பங்குதாரர்கள் என்ற முறையில் ரூ. 10 லட்சம் முதலீடு செய்து நடத்தி வந்தார்.அதில், ஜெயமாலா தனது பங்காக ரூ. 5 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்ததால், ஜெயமாலாவிற்கு 55 சதவீதம் பங்கும், இந்திராவிற்கு 45 சதவீதம் பங்கும் ஒதுக்கீடு செய்து பங்கு பத்திரம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 2021ம் ஆண்டு ஜெயமாலா மதுபான கடையின் பங்குதாரர் முறையில் இருந்துவெறியேறியது போன்றும், அவருக்கு பதிலாக குயவர்பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரை புதிய பங்குதாரராக இணைத்துஅவருக்கு 90 சதவீதம் பங்குகளை வழங்கியது போன்று, இந்திரா போலியாக பங்குபத்திரம் தயார் செய்துள்ளார்.அதில், ஜெயமாலாவை போன்று ஆள்மாறாட்டம் செய்து, நான்கு இடங்களில் போலியாக கையெழுத்தும் போட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெயமாலா, முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், இந்திரா மற்றும் தர்மராஜ் ஆகியோர் மீது போலி பங்கு பத்திரம் தயார் செய்து, ஆள்மாறாட்டம் கையெழுத்து மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.