தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு : சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

 கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு : சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

 கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு : சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்


ADDED : ஜன 31, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை, திரு.வி.க., நகரை சேர்ந்தவர் சார்லஸ், 42. இவர், வெளிநாட்டு வேலை தொடர்பாக ஆன்லைனில் தேடியபோது, வெங்கடா நகர், ரெயின்போ நகர் பூங்கா அருகே உள்ள தனியார் வெளிநாட்டு வேலை நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.

அப்போது, அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஷ்வா கார்த்திக், பொது மேலாளர் ஹேமமாலினி, உரிமையாளர்கள் ஜெயா, அஸ்வதா ஆகியோர், கனடா நாட்டில் வேலை இருப்பதாக கூறினர்.

பின், வேலைக்கான விசா செயலாக்க கட்டணமாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு, வேலைக்கான அனுமதி கடிதம் கனடா நாட்டில் உள்ள நிறுவனத்தில் வழங்கப்படும் என, சுற்றுலா விசா மூலம் கனடாவிற்கு அனுப்பினர்.

இதையடுத்து, கனடா நாட்டிற்கு சென்ற சார்லஸ், அந்த நிறுவனத்தை தேடியபோது, அவர்கள் தெரிவித்த நிறுவனம் கனடாவில் இல்லை என, தெரியவந்தது. பின், புதுச்சேரி திரும்பிய சார்லஸ் கனடா நாட்டில் வேலை வாங்கி வருதாக கூறி, ரூ.7.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மீது கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி, பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஷ்வா கார்த்திக், பொது மேலாளர் ஹேமமாலினி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில், 4 பேர் பற்றி தகவல்கள் ஏதுவும் இதுவரையில் கிடைக்காததால், போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவின் பேரில், மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று புதிதாக வழக்குப் பதிந்து விசாரணையை துவங்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us