/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூன்று பேரிடம் ரூ.31.56 லட்சம் மோசடி
/
மூன்று பேரிடம் ரூ.31.56 லட்சம் மோசடி
ADDED : நவ 16, 2024 02:20 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரிடம் 31.56 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயமாலினி. இவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை கிளிக் செய்த போது, வாட்ஸ் ஆப்பிற்கு சென்றது. அதில், பெயர் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யுமாறு காண்பித்தது. அதனை அடுத்து, மர்ம நபர் லிங் ஒன்றை அனுப்பினார். அதை கிளிக் செய்த போது, அவரது பெயரில் கணக்கு உருவாக்கப்பட்டது.
அந்த கணக்கு மூலம், அவர் 200 ரூபாயை, செலுத்தினார். தொடர்ந்து அவருக்கு 50 ரூபாய் கூடுதாக பணம் வந்தது. அதே போல ஒவ்வொரு முறையும் பணம் கட்டினார். அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை முடித்து, அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை.
மேலும், வி.ஐ.பி., உறுப்பினராக இருக்க வேண்டும் என வந்ததால், அதை நம்பி, அவர், மொத்தமாக 6.88 லட்சத்தை அனுப்பி ஏமாந்தார்.
அதே போல, நைனார்மண்டபத்தை சேர்ந்த வேலாயுதம் என்பவர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக சம்பாதிக்கலாம் என மர்ம நபர் கூறியதை நம்பி, 13 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். தொடர்ந்து, முத்திரையர்பாளையம் சேர்ந்த திவ்யா, ஆன்லைன் மூலம் 11.68 லட்சம் ரூபாய் அனுப்பி மர்ம நபரிடம் ஏமாந்தார். இதுகுறித்து, 3 பேர் கொடுத்து புகாரின், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.