/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 பேரிடம் ரூ.57.47 லட்சம் மோசடி
/
5 பேரிடம் ரூ.57.47 லட்சம் மோசடி
ADDED : மார் 02, 2024 06:16 AM
புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிகம் சம்பாதிக்கலாம் என கூறியதால், அவர் தனது வங்கி கணக்கில் இருந்து தவணை முறையில் ரூ. 30 லட்சம் பணத்தை அனுப்பினார். அதன் பிறகு, அந்த நபரிடமிருந்து எந்த தகவலும் வரததால் அவர் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.
மேலும் புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ்,33; என்பவர் வேலைக்காக தவணை முறையில், ஆன்லைன் மூலம் ரூ. 5.72 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார்.
மதுமிதா என்பவர் இன்ஸ்ட்ராகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, குறைந்த விலையில், விலை உயர்ந்த மொபைல் போன் உள்ளிட்ட பல பொருட்களை வாங்குவதற்கு, ரூ. 3.20 லட்சம் பணத்தை அனுப்பினார். பொருட்கள் வராததால் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
மேலும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மர்ம நபர் கூறியதை நம்பி, ரமேஷ் என்பவரர் ரூ. 17.75 லட்சத்தை அனுப்பி ஏமாற்றப்பட்டார். அதே போல காரைக்காலை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரும் ரூ. 80 ஆயிரம் அனுப்பி ஏமாந்துள்ளார்.
புகார்களின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

