UPDATED : நவ 27, 2026 12:06 AM
ADDED : நவ 27, 2026 12:06 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பேக்கரி உரிமையாளரிடம் ரூ. 4.36 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, சாரம் சத்யா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 48; பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு 10:00 மணியளவில் இவரது மொபைல் போனில் சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தின் லிங்கை கை தவறி தொட்டுள்ளார். பின் போனை வைத்துவிட்டு துாங்கினார். 24ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 4 லட்சத்து 36 ஆயிரத்து 435 ரூபாய் எடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து ரமேஷ் உருளையான்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
