தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏலச்சீட்டு நடத்தி மோசடி தந்தை, மகனுக்கு வலை

ஏலச்சீட்டு நடத்தி மோசடி தந்தை, மகனுக்கு வலை

ஏலச்சீட்டு நடத்தி மோசடி தந்தை, மகனுக்கு வலை


ADDED : நவ 15, 2024 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏலச்சீட்டு நடத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.6.80 லட்சம் மோசடி செய்த தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 71; ஓய்வு பெற்ற தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்.இவரிடம் ரெட்டியார்பாளையத்தில், பால்கடை நடத்தி வந்த காராமணிக்குப்பம் ரங்கராஜன், அவரது மகன் கிேஷார் ஆகியோர், தாங்கள் ஏலச்சீட்டு நடத்தி வரும் சேர்ந்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்றனர்..

அதனை நம்பிய செல்வராஜ் மற்றும் அவரது மருமகன் சிவக்குமார் ஆகியோர் தனித்தனியாக கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் முதல் 17 மாதங்கள் தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சீட்டு கட்டினர்.

கடந்த பிப்ரவரி மாதம் சீட்டை எடுக்க பால்கடைக்கு சென்ற போது, கடை மூடியிருந்தது. ரங்கராஜன் மற்றும் அவரது மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் செல்வராஜை போனில் தொடர்பு கொண்ட ரங்கராஜன் வீட்டிற்கு அழைத்தார். வீட்டிற்கு சென்ற செல்வராஜை, ரங்கராஜன் அவரது மகன் கி ேஷார் ஆகியோர் பணத்தை தர முடியாது என கூறி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, ரங்கராஜன், கி ேஷார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us