தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்


ADDED : ஜூன் 21, 2025 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 12:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : வாதானுார் அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வித்துறை மூலம் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, 36 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். தொடர்ந்து, இப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதையொட்டி, தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டினார்.

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன், தலைமை ஆசிரியர் வீரய்யன், ஆசிரியர் பாலகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பி.எஸ்.பாளையம் பாரதிதாசன் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பி.எஸ்.பாளையம், வாதானுார், திருக்கனுார், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கொடாத்துார் கிராமங்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச காலணி மற்றும் போர்வையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us