/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் சொத்தில் இலவச மனைப்பட்டா: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்
/
கோவில் சொத்தில் இலவச மனைப்பட்டா: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்
கோவில் சொத்தில் இலவச மனைப்பட்டா: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்
கோவில் சொத்தில் இலவச மனைப்பட்டா: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்
ADDED : மார் 22, 2025 03:20 AM
சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்;
அனிபால் கென்னடி(தி.மு.க): ஆதிதிராவிடர் மக்களுக்கு சிறப்பு கூறு நிதியை செயல்படுத்த தனி இயக்குநரகம் ஏற்படுத்த வேண்டும்.
அமைச்சர் சாய்சரவணன்குமார்: அரசிடம் இத்திட்டம் இல்லை.
அனிபால்கென்னடி(தி.மு.க): சிறப்பு கூறு நிதி பல துறைகளுக்கு பிரித்து கொடுத்தும் ஆதிதிராவிடர்களின் வாழ்க்கை முன்னேறவில்லை. சிறப்பு கூறு நிதி மடைமாற்றம் செய்யப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: சிறப்பு கூறு நிதி பெரிய அளவில் ஒதுக்கப்படுகிறது. ஒரு காலத்தில் வீடு தீப்பிடித்து எரிந்தாலும், புகை அடங்குவதற்குள் நிதி கொடுத்தோம். ஆனால் இன்றைக்கு நிலமை மாறியுள்ளது. எனவே திறமையான ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும்.
அமைச்சர் சாய்சரவணன்குமார்: இரண்டாயிரம் பேருக்கு மனைப்பட்டா அரசு கொடுக்க உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் பயனாளிகள் லிஸ்ட் கொடுத்தால் இலவசமனைப்பட்டா வழங்கப்படும். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் சிவா பட்டியலை கொடுக்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: இலவசமனைப்பட்டா எடுக்க கோவில் சொத்துகளை எடுத்துள்ளீர்கள். சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அதனால் தான் அஞ்சுகிறோம்.
முதல்வர் ரங்கசாமி: இந்த இலவச மனைபட்டா விவ காரத்தினை பலமுறை பேசியாகிவிட்டது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: கடந்த 11 ஆண்டுகளாக இலவச மனைப்பட்டா வழங்கப்படவில்லை. அவ்வப்போது இடத்தை எடுத்து கொடுத்து இருந்தால் பிரச்னை இல்லை. அமைச்சர் எம்.எல்.ஏ.,க்களின் பேச்சை முழுமையாக கேட்டு பதில் சொல்ல வேண்டும்.