ADDED : மார் 10, 2024 05:06 AM

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மற்றும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனம் இணைந்து பண்டசோழநல்லுாரில் இலவச மருத்துவ முகாமை நடத்தினர்.
புதுச்சேரி துணை சபாநாயகர் ராஜவேலு இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, சம்பந்தமான நோய்களுக்கும் பல், எலும்பு, இதயம், நீரிழிவு, கை, கால் வலி, மூட்டு வலி, வாத நோய், சளி, இருமல், ஆஸ்துமா காய்ச்சல் ரத்தசோகை மஞ்சள் காமாலை மாதவிடாய் கோளாறு, வெள்ளைப்படுதல், தோல் வியாதி, ஒற்றைத் தலைவலி, நாள்பட்ட புண்கள், துாக்கமின்மை, மலச்சிக்கல் உள்ளிட்டநோய்களுக்கும்பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
பொது மேலாளர் அருண்கார்த்திக், மனித வளம் மேம்பாட்டு அலுவலர் சதீஷ்குமார், தொழிலதிபர் தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமில் பங்கேற்ற மக்களுக்கு மருந்து, மாத்திரைகள்; பார்வைபாதிக்கப்பட்டவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
