UPDATED : அக் 15, 2026 07:03 PM
ADDED : அக் 15, 2026 06:58 PM

புதுச்சேரி: புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குனர் ஆதர்ஷ் உத்தரவின் பேரில் அனைத்து நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் ஸ்வச்சதா ஹி சேவா துாய்மை பணி நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் திருக்கனுாரில் நடந்தது.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் டாக்டர்கள் அடங்கிய குழு பங்கேற்று அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, மருந்துகள் வழங்கினார்.
இதில் 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், ஓவர்சீஸ் சச்சிதானந்தம், எச்.ஆர். ஸ்கொயர் ஊழியர்கள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உடனிருந்தனர்.
