ADDED : ஜூலை 29, 2025 07:17 AM

புதுச்சேரி : புதுச்சேரி, கோவிந்தசாலை, தேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோவிலில், மனித நேய மக்கள் சேவை இயக்கம், அருள் மெடிக்கல் சென்டர் மற்றும் அருணா ரத்த பரிசோதனை நிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு தலைமை தாங்கி, மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். மனித நேய மக்கள் சேவை இயக்க பொது செயலாளர் விநாயகம், கோஜிரியோ கராத்தே சங்கம் செயலாளர் சுந்தர்ராஜன், இளைஞரணி தலைவர் ரகோத்தமன், போதீஸ் பொது மேலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். இதில், டாக்டர்கள் சுதர்சன், ராமானுஜம், பொதுநலம் மற்றும் சக்கரை நோய் நிபுணர்கள் திருவழுதி, வைதீஸ்வரி, ஐஸ்வரியா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்று, பொது மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை நலம், நுரையீரல் மற்றும் பா த சிகிச்சை, ரத்த அழுத்தம், ரத்த சக்கரை அளவு, தைராய்டு, பல் சிகிச்சை உள்ளிட்ட ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர் .
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரெனோ, பெருமாள் ராஜா செய்திருந்தனர்.