
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதி காங்., மற்றும் ஈரம் பவுண்டேஷன் சார்பில், பெருமாள் கோவில் வீதியில் உள்ள லலிதா மகாலில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, ஈரம் பவுண்டேஷன் நிறுவனரும், முத்தியால்பேட்டை தொகுதி காங்., பொறுப்பாளருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மருத்துவ முகாமினை துவக்க வைத்தார். காங்., கட்சியின் முன்னாள் தலைவர் சுப்ரமணியன், காங்., மூத்த துணைத் தலைவர் தேவதாஸ், மாநில செயலாளர் வக்கீல் குமரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர் குழுவினர் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து இலவச மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
தொடர்ந்து தேவையானவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.