ADDED : பிப் 09, 2026 04:52 AM

புதுச்சேரி: கருவடிக்குப்பம் சத்யா சிறப்பு பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
சக் ஷம் (தமிழ்நாடு) புதுச்சேரி மாவட்ட மாநாட்டை முன்னிட்டு, லயன்ஸ் கிளப் சென்ட்ரல் புதுச்சேரி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம், முடநீக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கருவடிக்குப்பம் சத்யா சிறப்பு பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஆனந்தன் தலைமை தாங்கினார். சக் ஷம் செயலாளர் மாதவ தாஸ் வரவேற்றார்.
தமிழக இணை செயலாளர் ராம ரமேஷ், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக செல்வம் எம்.எல்.ஏ., லயன்ஸ் கிளப் ஆப் சென்ட்ரல் பொறுப்பாளர்கள் பாஸ்கரன், சிவகுமார், கார்த்திகேயன், சந்திரசேகர் குப்தா முகாமினை துவக்கி வைத்து, முடநீக்கு உபகரணங்களை வழங்கினர். ஏற்பாடுகளை நாகராஜ், மணிகண்டன், சுஜய், சேது ராஜன், ஐஸ்வர்யா, குமாரி, ஞானமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
பொருளாளர் சவுரிராஜ் நன்றி கூறினார்.

