sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்


ADDED : ஜூன் 24, 2025 08:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2025 08:03 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில், அரசு நலவழித்துறை, பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

முகாமை, அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். ஸ்கேன் இயந்திரத்தை திறந்து வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கினார்.சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியன் வரவேற்றார்.

முகாமில், பொது மருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை, கண், பல் மற்றும் காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து சிவப்பு அட்டைதாரர்கள், 70 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக காப்பீடு பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, தொகுதியில் உள்ள காசநோயாளிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க தனது சொந்த செலவில் அமைச்சர் நமச்சிவாயம் 35 ஆயிரம் ரூபாயை மருத்துவ அதிகாரியிடம் வழங்கினார்.குடும்ப நலத்றை துணை இயக்குநர் அனந்தலட்சுமி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை துணை இயக்குநர் மாலதி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us