ADDED : மார் 12, 2024 05:50 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : போலீசாருக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று துவங்கியது.
புதுச்சேரி ஆயுதப்படை போலீஸ் சார்பில் போலீசார் மற்றும் போலீஸ் குடும்பத்தினருக்கு 6 நாள் நடைபெறும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று துவங்கியது.
கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ கல்லுாரியில் துவங்கிய மருத்துவ முகாமை, போலீஸ் ஐ.ஜி. அஜித்குமார் சிங்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். எஸ்.பி. ரட்சனாசிங் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில், கண், பல் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
