ADDED : அக் 08, 2025 07:00 AM

வானுார்; ஆரோவில் கிராம செயல்வழிக்குழுவும், கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்த, இலவச பொது மருத்துவ முகாம், வானுார் அருகே தைலாபுரம் கிராமத்தில் நடந்தது.
ஊராட்சி தலைவர் தனபால்ராஜ், வார்டு உறுப்பினர் மூர்த்தி முகாமை துவக்கி வைத்தனர். பிம்ஸ் டாக்டர்கள் ரத்தீஸ்ரீ, பிருந்தாதேவி, கேத்லின் மேரி, வைஷாலி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் பொதுநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு, அறுவை சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்டவைகள் சம்பந்தமாக சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பிம்ஸ் முகாம் ஒருங்கிணைப்பாளர் துரைசாமி, மகளிர் குழு பொறுப்பாளர்கள் செல்வி, விமலா, ஜானகி, கண்ணகி, கலையரசி மற்றும் ஆரோவில் கிராம செயல்வழிக்குழு பணியாளர்கள் லட்சுமி, வினோத், ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.