/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச அரிசி டிசம்பர் முதல் வழங்கப்படும்
/
இலவச அரிசி டிசம்பர் முதல் வழங்கப்படும்
ADDED : நவ 25, 2024 05:07 AM
புதுச்சேரி : மாதாந்திர இலவச அரிசி டிசம்பர் மாதம் முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரியில் மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச அரிசிக்கான பணம் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. தேர்தலின் போது பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, முதல்வர் ரங்கசாமி இலவச அரிசிக்கான பணத்திற்கு பதில் மீண்டும் அரிசி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தார். முதற்கட்மாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கும் பணி நடந்தது. முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் கூறியதாவது; சிவப்பு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு 10 கிலோ இலவச மாதந்திர அரிசி, டிசம்பர் முதல் வழங்கப்படும் என தெரிவித்தார்.