ADDED : நவ 04, 2026 09:29 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் இலவச பக்கவாத மறுவாழ்வு முகாமில், பயனாளிகளுக்கு டாக்டர்கள் ஆலோனை வழங்கினார்.
புதுச்சேரி, வெங்கட்டா நகரில் உள்ள எல்ராய் பிசியோ கேர் கிளினிக் சார்பில் இலவச பக்கவாத மறுவாழ்வு முகாம், எல்ராய் கேர் கிளினிக்கில் இன்று (நவ.,4) துவங்கியது. இதில், பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
தற்போது சூழ்நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரை அணுகவும், பக்கவாதம் ஏற்பட்ட 3 மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை பெறுவது அவசியத்தை சிறப்பு நிபுணர்கள் முகாமில் பங்கேற்வர்களுக்கு ஆலோசனை வழங்கினர். இன்று (5ம் தேதி) இரண்டாவது நாளாக முகாம் நடக்கிறது.
