/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் இலவச சிகிச்சை முகாம்
/
ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் இலவச சிகிச்சை முகாம்
ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் இலவச சிகிச்சை முகாம்
ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் இலவச சிகிச்சை முகாம்
ADDED : ஜன 06, 2025 06:56 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் இலவச பிசியோதெரபி சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.
காலை 9:00 மணிக்கு துவங்கிய முகாம் மதியம் 1:00 மணி வரை நடந்தது.
முகாமில் டிஸ்க் விலகல், சியாட்டிகள், கழுத்து வலி, முதுகு வலி, கழுத்து மற்றும் முதுகு எலும்பு தேய்மானம்உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிசியோதெரபி நிபுணர் ராஜா ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
பிசியோதெரபி நிபுணர் ராஜா கூறுகையில், 'பொதுவாக மூட்டு மாற்று , எலும்பு முறிவு குணமடைந்த பிறகு கண்டிப்பாக பிசியோதெரபி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.பிசியோதெரபி சிகிச்சை எடுக்காமல் இருந்தால் பாதிக்கப்பட்ட மூட்டு விரைப்பு, குறைந்த அளவிலான இயக்கத்தை சந்திக்க நேரிடும்.
மேலும் பிசியோதெரபி சிகிச்சை இல்லாமல் தசைகள் பலவீனம் ஏற்படலாம், பொதுவாகவே பிசியோதெரபி சிகிச்சை எலும்பு முறிவுக்கு பிறகு, வலிமை நெகிழ்வு தன்மை, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.
எலும்பு முறிவுக்கு பிறகு போதிய பிசியோதெரபி சிகிச்சை இல்லாததால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாள்பட்ட வலி, இறுக்கம் ஏற்படலாம். பிசியோதெரபி சிகிச்சை என்பது எலும்பு முறிவுக்கு பிறகு மறுவாழ்வுக்கு முக்கியமானது. இது நீண்ட கால சிக்கல்களின் அபாயத்தை குறைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் ஆலோசனைக்கு 95007-12391 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

