ADDED : பிப் 27, 2024 06:40 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : காலப்பட்டு குப்பம் பூங்காவன செட்டியார் அரசு தொடக்கப் பள்ளிக்கு இலவச டி.வி. வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை ரமா தலைமை தாங்கினார். ஆசிரியை வரலட்சுமி வரவேற்றார்.
ஆசிரியைகள் பாத்திமா, விஜயலட்சுமி, சங்கர் தேவி, புஷ்ப ரேகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியைகள் அபிராமி, ஞானசவுந்தரி கருத்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக ரகுநாத்பால் கலந்து கொண்டு, மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் இலவசமாக ஸ்மார்ட் டிவி வழங்கினார்.
