/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு
/
இலவச தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு
ADDED : நவ 20, 2025 05:58 AM

புதுச்சேரி: புதுச்சேரி மகளிர் காங்., சார்பில், இலவச தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா முதலியார்பேட்டையில் நடந்தது.
மகளிர் காங்., தலைவி நிஷா தலைமை தாங்கினார். மாநில தலைவர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.விழாவில், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிலையத்தில், மகளிர்களின் திறனையும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சுயத்தொழில் செய்யும் வகையில், தையல் பயிற்சி, ஆர்யா வகுப்புகள், ஸ்போக்கன் இங்கிலீஷ், ஸ்போக்கன் ஹிந்தி, திறன் மேம்பாட்டு வகுப்புகள், கணினி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது.
மாணவிகள், பெண்கள், முதலியார்பேட்டை தொழிற் பயிற்சி நிலையத்தில் காலை முதல் மாலை வரை அனைத்து நாட்களிலும் இலவசமாக சானிடரி நாப்கின் பெற்றுக் கொள்ளலாம்.

